
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய ஆணைக்குழு ஒன்றை நிறுவியுள்ளார்.
இந்த விசாரணைக்குழுவின் தலைவராக சில்வியா கட்ரைட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தொடர்பில் விசாரணை நடாத்தும் ஆணைக்குழு இலங்கைக்கு விஜயம் செய்யாது, நாட்டுக்கு வெளியே இருந்து கொண்டே விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், பத்து மாத காலத்திற்குள் இந்த விசாணைகள் முடிவுறுத்தப்பட உள்ளன.
குறித்த விசாரணைக் குழு நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப் போவதில்லை என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
2011ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய நிபுணர் குழுவினரும் நாட்டுக்கு வெளியே இருந்து கொண்டே விசாரணைகளை நடத்தியிருந்தனர்.
இந்த நிபுணர் குழுவிற்கு தாருஸ்மன் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக