(ஓவியன்) வவுனியா திருநாவற்குளம் ஐயனார் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா இன்று (29/06) பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமானது. திருமதி.கே.சச்சிதானந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து இன்றைய நிகழ்வுகளை சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக வவுனியா வடக்கு, தெற்கு வலயங்களின் முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர்களான திரு எஸ்.ராஜேஸ்வரன், திரு கோ.தர்மபாலன் ஆகியோருடன், தாண்டிக்குளம் கிராம சேவையாளர் திரு எஸ்.கோணஸ்வரலிங்கம் , முன்பள்ளி வலய இணைப்பாளர் திருமதி எஸ்.அருள்வேல்நாயகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கௌரவ விருந்தினர்களாக புளொட் முக்கியஸ்தரும், வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினருமாகிய திரு எஸ்.ஜெகதீஸ்வரன்(சிவம்), சமூக ஆர்வலரும் புளொட் அமைப்பின் லண்டன் கிளையின் முக்கியஸ்ருமான திரு த.நாகராஜா, புளொட் முக்கியஸ்தரும், மாதர் அபிவிருத்திச் சங்க தலைவியுமான திருமதி சோ.நகுலேஸ்வரம்பிள்ளை, முன்பள்ளி பிரதேச இணைப்பாளர் திருமதி வி.சசிகலா, முன்பள்ளி கட்டமைப்பு தலைவர் திரு. ஆர்.ராமச்சந்திரன், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் திரு பா.பாலேந்திரன், திருநாவற்குள சிரேஷ்ட சாரணர்கள் கலந்து இன்றைய விளையாட்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.
சிறார்களின் கண்கவர் நிகழ்வுகளும் அவர்களின் விளையாட்டின் வெளிப்பாடுகளும் பார்வையாளர்களின் கண்களை கவர்ந்தன.
நிகழ்வில் பிரதம விருந்தினர் உரை நிகழ்த்திய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) எமது கிராமத்தின் சிறார்களின் திறமைமிக்க செயல்பாடுகள் எனக்கு பெருமையளிக்கிறது. லண்டனில் வசிக்கும் எமது திருநாவற்குள நண்பன் நாகராஜா அவர்களின் பங்களிப்பில் நடைபெறும் எமது கிராமத்தின் அபிவிருத்தி, கல்வி, விளையாட்டு துறைகளின் துரித வளர்ச்சி கண்டு எமது கழகம் பெருமை கொள்கிறது. இவர் தனது உதவியினை கல்வி மட்டுமில்லாது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கும் தனது சேவையினை பன்முகபடுத்துவதும் எமது கழகத்திற்கு பெருமையளிக்கிறது. இன்று இவர் எமது முன்பள்ளியின் ஆசிரியர்களுக்கான ஊக்குவிப்பு தொகையை மாதாந்தம் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியமை எமது கிராமத்தில் அவர் கொண்ட அதீத அக்கறையாகும் எனவும் தெரிவித்தார். எனினும் எமது குடியேற்ற கிராமத்தில் அதிகமான பெற்றோர்கள் தமது பிள்ளைகளை நகர் பகுதிகளுக்கு கொண்டு செல்வதால் இந்த கிராமத்தின் முன்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பது மனவேதனையளிக்கிறது எனவும், முன்பள்ளி எமது மறைந்த தலைவர் உமாமகேஸ்வரனின் நாமத்தில் எம்மால் அமைக்கப்பட்ட முன்பள்ளியின் பெயரை அவரின் நாமத்தில் மாற்றியமைப்பது காலத்தின் கட்டாயமாகும் என தெரிவித்ததுடன். அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது பெருமையளிப்பதாகவும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக