செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

ஜனாதிபதி மைத்திரி நிஷா பிஸ்வால் சந்திப்பு..!!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள நிஷா பிஸ்வால், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக