செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்..!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக முன்னிலை சோசலிச கட்சியினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் ஆணையாளர் கோராமலேயே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராணுவத்தை அழைத்துள்ளார்.

இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது எனத் தெரிவித்து முன்னிலை சோசலிச கட்சியினர் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

ஆயுதப் படையினருக்கு பொலிஸ் அதிகாரங்களை அளிக்கும் நியதிகளுக்கு அமைய படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

2011ம் ஆண்டில் அப்போதைய அரசாங்கம் அவசரகால சட்டத்தை நீக்கியது.
எனினும், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தைப் பயன்படுத்தி முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் பொலிஸ் அதிகாரங்களை, முப்படையினருக்கு வழங்கும் சுற்று நிருபமொன்றை அரசாங்கம் தொடர்ச்சியாக மாதம் தோறும் நீடித்து வந்தது.

இதன் ஊடாக அவசரகாலச் சட்டத்தை நீக்கி ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டதாக தோற்றத்தை உருவாக்கி, தொடர்ந்தும் இராணுவ அடக்குமுறையின் கீழ் அரசாங்கம் ஆட்சி நடத்தியுள்ளது என முன்னிலை சோசலிச கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த வழக்கின் பிரதான பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிடப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக