திங்கள், 27 செப்டம்பர், 2010
18ஆவது அரசியலமைப்பு:பிரதிநிதிகளை அறிவிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம்..!!
18 ஆவது அரசியலமைப்பின் நாடாளுமன்ற சபைக்கு எதிக்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தமது பிரதிநிதிகளை அறிவிப்பதற்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இரு தலைவர்களும் இன்னும் ஒரு வாரத்தில் தமது பிரதிநிதிகளை அறிவிப்பர் என நாடாளுமன்றச் செயலாளர்நாயகம் தம்மிக்க கித்துல்கொட இன்று தெரிவித்தார். ஏற்கனவே தெரிவான பிரதிநிதியின் பெயர் நிராகரிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் மற்றுமொருவரை அறிவிக்கும்படி தாம் எழுத்துமூலம் கேட்டிருந்ததாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.புதியவரை எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு செய்ததும், பிரதிநிதிகள் பட்டியலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கவுள்ளதாக சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை பரிந்துரை செய்திருந்த போதிலும், அது நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் அக்கிய மூவரும் ஐவரை மேற்படி புதிய அரசியலமைப்புச் சபைக்கு பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யும்படி கேட்கப்பட்டிருந்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக