ஞாயிறு, 1 நவம்பர், 2009
5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் முகாம்களிலிருந்து தோற்றிய 507மாணவர்கள் சித்தி
அண்மையில் நடந்துமுடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு நலன்புரி நிலையங்களிலிருந்து தோற்றியவர்களில் 507 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இவர்களில் 267 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்சன் ஒஸ்வெல்ட் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 5,413 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 507 இடம்பெயர்ந்த மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாணவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 196 மாணவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 267 மாணவர்களும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 27 மாணவர்களும், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 07 மாணவர்களும் என மொத்தமாக 507 மாணவர்கள் நிவாரணக் கிராமத்தில் சித்தியடைந்துள்ளனர். எல்லா நிவாரணக் கிராமங்களுக்கும் வெட்டுப்புள்ளியாக 111 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக