செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

சர்வதேசத்தின் முன் இலங்கையின் நீதித்துறையை நிரூபிக்க வேண்டியுள்ளது மங்கள சமரவீர...!!!

சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையிலும் நீதித்துறை வலுவான சுதந்திரமான மற்றும் பக்கசார்பற்றது என்பதை நிரூபிக்க வேண்டியுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை பதவி நீக்கியமை தொடர்பான விவாதம்  நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது கருத்துரைத்த வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, உள்நாட்டின் பொறிமுறைக்கு ஊடாக மனித உரிமை விடயங்களை கையாள இலங்கையில் உள்ள நீதித்துறை தகுதியானது என்பதை சர்வதேசத்துக்கு நிரூபிக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.


இலங்கை மீது மேற்கொள்ளப்படும் சர்வதேச விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

இந்தநிலையில் இலங்கையின் நீதித்துறை நம்பகத்தன்மையில்லாமல் போகும் போது குறித்த விசாரணையின் முடிவு இலங்கையின் இராணுவத்தினர் மற்றும் ஏனையவர்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வழி வகுத்துவிடும்.

முன்னைய அரசாங்கம் உள்நாட்டு பொறிமுறையில் தோல்வி கண்டமையே இன்று ஏற்பட்டுள்ள நிலைமைக்கு காரணமாக உள்ளது. எனவே அதனை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதேவேளை, மொஹான் பீரிஸ் பதவியில் இருந்து அகற்றப்பட்டமையை நியாயப்படுத்திய மங்கள சமரவீர, அவர் நீதித்துறையின் சர்வதேச தர நியமங்களை மீறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக