வியாழன், 6 நவம்பர், 2014

வாகனத்தில் 17 கிலோமீற்றர் வரை இழுத்துச் செல்லப்பட்ட சடலம்..!!(படங்கள் இணைப்பு)

வாகன விபத்தொன்றில் உயிரிழந்த நபரின் சடலம், நவலப்பிட்டி பிரதேசத்தில் இருந்து கம்பளை நகரம் வரை 17 கிலோ மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட அதிகாரிகள் குழு, நாவலப்பிட்டி முதல் கம்பளை வரையுள்ள வீதியில் காணப்பட்ட இரத்த கறையை பின்தொடர்ந்து சென்ற போது இந்த சடலம் கிடப்பதை கண்டுள்ளனர்.

இதனையடுத்து சடலத்தை மீட்ட பொலிசார் அதனை கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைத்துள்ளதுடன், சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக