புதன், 25 பிப்ரவரி, 2015

தேசிய அரசாங்கத்தின் 25 அமைச்சர், பிரதி அமைச்சர்கள் பதவிகள் வேண்டும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்...!!

தேசிய அரசாங்கத்தில் 25 அமைச்சர் பதவிகளும் 25 பிரதி அமைச்சர் பதவிகளும் தமக்கும் வழங்கப்பட வேண்டுமென சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைக்க வேண்டுமாயின் இவ்வாறு அமைச்சுப் பிரதி அமைச்சுப் பதவிகள் பகிரப்பட வேண்டும்.

கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களுக்கு தேசிய அரசாங்கத்தில் பதவிகள் வழங்கப்படக் கூடாது.

அமைச்சரவை அமைச்சுக்களின் முக்கிய அமைச்சுக்கள் பல சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும்.


இந்த தேசிய அரசாங்கம் 2016ம் ஆண்டு வரையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இதுவரையில் எவ்வித பதில்களையும் வழங்கவில்லை.

பெரும்பான்மை தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக எதிர்க்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறெனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேசிய அரசாங்க தி;ட்டத்திற்கு ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் ஐக்கிய முன்னணி, கம்யூனிஸ்ட்கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

ஏப்ரல் மாதம் நாடாளுமன்றை கலைத்து பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென இந்தக் கட்சிகள் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக