வியாழன், 22 மே, 2014

தமிழ் தேசியக் கூட்டமைப்பின், ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் தலைமையில் கொழும்பு, மாதிவெலயில் இன்று(22/05) மாலை 5மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், கருணாகரன், சுமந்திரன், சிவநேசன் பவன், ஆர். ராகவன், சர்வேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இக்கூட்டத்தின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டதுடன், இந்திய தேர்தலின் பின்னர் பாரதீய ஜனதா கட்சி வெற்றிபெற்றிருக்கும் சூழ்நிலையில் இலங்கை தொடர்பான இந்திய அரசியல் நிலைப்பாடுகள் பற்றியும், இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

மற்றும் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளை உள்வாங்கி அங்கு உறவுகளைப் பேணுவது குறித்தும் கூடுதல் கவனமெடுத்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையேற்றிருக்கின்ற பல பிரதேச சபைகளினுடைய நடைமுறைச் சிக்கல்கள் சம்பந்தமாகவும் இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது. இவற்றை சரிசெய்வதற்கு நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்படல் வேண்டுமென ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக