திங்கள், 12 ஜனவரி, 2015

அமைச்சரவை இன்று கூடுகிறது 30 அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அமைச்சரவை இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள்ளவுள்ளது.

இவ் அமைச்சரவை 30 உறுப்பினர்களை கொண்டாதாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் இவ்வாறு 30 பேரை கொண்ட அமைச்சரவையாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவைக்காக ஜே.வி.பிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கடந்த நாட்களில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அத்துரலிய ரத்தின தேரர் குறிப்பிட்டிருந்தார்.


எப்படியிருப்பினும், ஜே.வி.பி இது சம்பந்தமாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக