திங்கள், 12 ஜனவரி, 2015

ஜனாதிபதி மைத்திரியை கொழும்பில் இன்று சந்திக்கிறது த.தே. கூட்டமைப்பு..!!

தமிழ் பேசும் மக்களின் அமோக வாக்குகளினால் வெற்றியீட்டி புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பினரை இன்று முதன்முதலாக சந்திக்கவுள்ளார்.
இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

புதிய ஜனாதிபதியின் அழைப்புக்கிணங்க இந்தச் சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.


ஜனாதிபதி செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ள இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்வார்கள் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாகப் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக