செவ்வாய், 23 டிசம்பர், 2014

இந்திய நடிகர்களை கொண்டு தேர்தல் பிரசாரம் செய்தாலும் மக்கள் என்பக்கமே மைத்திரி..!!

இந்திய நடிகர்களை கொண்டு தேர்தல் பிரசாரம் செய்தாலும் மக்கள் என்பக்கமே உள்ளார்கள் என ஜனாதிபதி தேர்தல் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடக்கின்ற தேர்தல் பிரசாரங்களில் வங்குரோத்து அடைந்துள்ள நிலையில் மகிந்த ராஜபக்ச தற்போது இந்தியாவின் உதவியை நாடியுள்ளார்.

மக்கள் ஏமாந்த காலம் எல்லாம் போய் விட்டது, இலங்கை மூவின மக்களும் தற்போது குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கின்றரர்கள். அதன் காரணமாகவே இன்று அமைசர்கள் எனக்கு ஆதரவு அளிக்கின்றனர்.

மக்கள் பணத்தை இதுபோன்ற காரியங்களுக்கு பாவிக்காமல் அந்த மக்களுக்கு கொடுத்திருந்தால் தற்போது இது போன்ற காரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்காது.


தனது குடும்பமே இன்று எதிராக நிற்கின்றமை யாவரும் அறிவோம், மக்கள் பணத்தை அதிகம் செலவு செய்த ஒரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மட்டும்தான் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக