சனி, 27 டிசம்பர், 2014

25 நாட்களில் 155 அரசியல்வாதிகள் கட்சித் தாவியுள்ளனர்..!!!

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் 25 நாட்களில் 155 அரசியல்வாதிகள் கட்சித் தாவியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டு, இந்த கட்சித் தாவல் நடவடிக்கையை ஆரம்பித்தார்.

இதுவரையில் 155 மக்கள் பிரதிநிதிகள் ஆளும் கட்சியுடனும் எதிர்க்கட்சியுடனும் இணைந்து கொண்டுள்ளனர்.

அதிகளவான ஆளும் கட்சி மக்கள் பிரதிநிதிகள், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேனவுடன் 111 பேர் இணைந்து கொண்டுள்ளதுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் 44 பேர் இணைந்து கொண்டுள்ளனர்.


அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, நவீன் திஸாநாயக்க, துமிந்த திஸாநாயக்க,ரிசாத் பதியூதின், சம்பிக்க ரணவக்க, பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன உள்ளிட்ட 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜனநாயகக் கட்சியின் பிரதித் தலைவர் ஜயந்தகெட்டகொட உள்ளிட்ட இரண்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக