சனி, 27 டிசம்பர், 2014

மஹிந்தவிற்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை ஞானசார தேரர்..!!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தாய் நாட்டுக்காக நிபந்தனையற்ற அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது.

நாடு எதிர்நோக்கியுள்ள அனர்த்தத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் எவ்வித அழைப்பினையும் விடுக்காத போதிலும் பொறுப்பு வாய்ந்த அமைப்பு என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கத்
தீர்மானிக்கப்பட்டது.

எமது அமைப்பு ஒர் அரசியல் அமைப்பு அல்ல, மாறாக எமது அமைப்பு ஓர் தேசிய அமைப்பாகும்.

குரோத அரசியல்வாதிகளின் அசுத்தமான கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட வேண்டுமென கலகொட அத்தே ஞானசார தேரர் சிங்களப் பத்திரிகையொன்றிடம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக