வியாழன், 6 நவம்பர், 2014

இலங்கையில் இராணுவ ஆட்சி நிலவி வருவதாக மத அமைப்பு ஒன்று குற்றம் சுமத்தியமை குறித்து விசாரணை...!!

இலங்கையில் இராணுவ ஆட்சி நிலவி வருவதாக மத அமைப்பு ஒன்று சுமத்தியமை குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
குறிப்பிட்ட ஓர் மத அமைப்பு இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இலங்கையில் இராணுவ ஆட்சி முறை நிர்வாகம் மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் மக்களின் உரிமைகள் முடக்கப்படுவதாகவும் இந்த மத அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இராணுவ ஆட்சியினால் ஏற்படும் பாதக விளைவுகள் குறித்து விபரிக்கும் துண்டுப்பிரசுரங்களையும் இந்த அமைப்பு கடந்த வாரம் மக்களுக்கு விநியோகித்துள்ளது.

இராணுவ மயப்படுத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறித்த துண்டுப்பிரசுரத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்களின் பின்னணி தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இலங்கையில் இராணுவ ஆட்சி நிலவவில்லை எனவும், இந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்ட தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனவும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்தவ தேவாலயமொன்றின் நிர்வாகத்தினர் இவ்வாறு துண்டுப்பிரசுரங்களை விநியோகத்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக