வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதுடெல்லியில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக விக்னேஸ்வரன் இன்று இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் முதலமைச்சரின் இந்திய விஜயத்தில் இணைந்து கொள்ளவுள்ளனர்.
முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் விக்னேஸ்வரன் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லியில் நடைபெறவுள்ள நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர் முக்கிய இந்திய தலைவர்கள் சிலருடன் விக்னேஸ்வரன் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு நடத்துவார் எனவும் அதற்கான நேரத்தை ஒதுக்கீடு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும், பிரதமர் மோடியுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு நடத்துவாரா என்பது பற்றிய உத்தியோகபூர்வ தகவல்களை எதனையும் இந்திய அதிகாரிகள் வெளியிடவில்லை.
வட மாகாண முதலமைச்சர் தரப்பிலும், மோடியுடனான சந்திப்பு பற்றி எவ்வித விடயங்களையும் குறிப்பிடவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக