ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் அரசாங்கம் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்.
இரு தரப்பிற்கும் இடையில் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் விரைவில் நடத்தப்படும் என குறித்த முக்கிய அமைச்சர் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீமிற்கு அறிவித்துள்ளார்.
இந்த சந்திப்பிற்கான திகதியொன்று இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என ஹக்கீம் எழுத்து மூலம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு அறிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவு, கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் சில ஆண்டுகளாகவே
நிறைவேற்றப்படவில்லை என முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதேவேளை, கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனியான நிர்வாக மாவட்டத்தை வழங்குவது நடைமுறைச் சாத்தியமற்றது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எனினும் ஏற்கனவே அளிக்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றுமாறே கோருவதாக முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இரு தரப்பிற்கும் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்தையின் போது ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவு, முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக