வெள்ளி, 7 நவம்பர், 2014

இந்தியன் முஜாகிதீன் உதவியுடன் அல்கொய்தா தீவிரவாதிகள் பெரிய தாக்குதலுக்கு சதி…!!

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் முயற்சி செய்து வருவதை மத்திய உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது.

இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளுக்கும் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த உரையாடலை ஒட்டுக் கேட்டதன் மூலம் இந்த சதி திட்டம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

இந்தியாவில் கால் ஊன்ற முயன்று வரும் அல்– கொய்தாவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதனால் அந்த இயக்கம் தற்போது இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளுடன் கை கோர்த்துள்ளது.

முஜாகிதீன் தீவிரவாதிகளில் சிலரை அல்கொய்தா தலைவர்கள் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் வரவழைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு பல்வேறு ஆயுதப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் பதுங்கி இருக்கும் அல்கொய்தா தலைவன் அய்மன் – அல்–ஜவகரி முன்னிலையில் இந்த பயிற்சி நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது.


முதல் கட்டமாக 20 முஜாகிதீன் தீவிரவாதிகள் பயிற்சி முடித்துள்ளனர். அவர்கள் மூலம் இந்தியாவில் மிகப்பெரிய நாசவேலை செய்ய அல் கொய்தா தீவிரவாதிகள் திட்ட மிட்டுள்ளனர். இதற்காக தீவிரவாதிகளை நேபாளம், மியான்மரில் ஊடுருவ செய்ய முயற்சி நடப்பதை உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது.

சிரியா, ஈராக் போல இந்தியாவிலும் ஆங்காங்கே கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் அல்கொய்தாவின் திட்டமாகும். இது தவிர இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பயணிகளை கடத்திச் சென்று கொல்லவும் அல்கொய்தா – முஜாகிதீன் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக