நியூயார்க் நகரின் மேற்கு பகுதியில் ஒரு வீட்டின் அடித்தளத்தில் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட கையெறி குண்டுகள் நேற்று கண்டுபிடித்து அகற்றப்பட்டன.
இதனால் நியூயார்க் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் வர்த்தக தலைநகராக கருதப்படும் நியூயார்க் நகரின் மேற்கே ஆர்லியன்ஸ் கவுன்டியில் அல்பியான் நகரம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 1920ம் ஆண்டு முதல் வசித்து வந்த ஒரு பெண் கடந்த வாரம் தனது வீட்டை காலி செய்தார்.
இதைத் தொடர்ந்து, அங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நேற்று ஒரு ஒப்பந்ததாரர் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அடித்தளத்தில் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட 2 கையெறி குண்டுகளை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து மான்ரீ கவுன்டி ஷெரீப் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அந்த வீட்டிலிருந்து செயல்படும் நிலையில் இருந்த 2 குண்டுகளையும் பாதுகாப்பாக அகற்றினர். பின்னர் மற்றொரு இடத்தில் அந்த கையெறி குண்டுகள் பாதுகாப்பான முறையில் வெடிக்கப்பட்டது. அந்த வீட்டு சொந்தக்காரரின் உறவினர் ஒருவர் இரண்டாம் உலகப் போரின்போது பணியாற்றினார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
அதன் அடையாளமாகவே இந்த 2 கையெறி குண்டுகளையும் வைத்திருக்கிறார் என்று மான்ரீ கவுன்டி போலீசார் தெரிவித்தனர். வீட்டில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் நியூயார்க் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக