ஞாயிறு, 9 நவம்பர், 2014

முன்னாள் பேராசிரியர் சிவசாமி காலமானார்...!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத மொழித்துறை முன்னாள் பேராசிரியர் வி சிவசாமி, தமது 81வது வயதில் நேற்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
சமஸ்கிருதத்தில் புலமை பெற்றிருந்த அவர் இந்து கலாசாரம், இசைநடனம் போன்றவற்றில் திறமையும் மற்றும் தமிழ், ஆங்கில எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.

1974ஆம் ஆண்டு முதல் அவரால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பல மாணவர்கள் பயன்பெற்றனர்.

1933ம் ஆண்டு ஒன்பதாம் மாதம் 16ம் திகதி அவர் புங்குடுதீவில் பிறந்தார்.

ஆரம்பக்கல்வியை புங்குடுதீவில் கற்றார். பின்னர் யாழ்ப்பாண கல்லூரியில் இணைந்தார்.

1955ம் ஆண்டு  பேராதனை பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத, தமிழ் மற்றும் வரலாறு ஆகியவற்றை கற்பதற்காக இணைந்தார்.

1961ல் லண்டன் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பட்டம் பெற்றார்.


1958முதல் 1974 வரை அவர் யாழ்ப்பாண கல்லூரியிலும் 1962 முதல் 1965 வரை பேராதனை பல்கலைக்கழகத்திலும் அவர் விரிவுரையாளராக செயற்பட்டார்.

வாழ்வில் திருமண பந்தத்தில் இணையாத அவர் வாழ்நாள் முழுதும் கல்விக்காக அர்ப்பணிப்பை செய்தார்.

இவரது நூல்கள்

திராவிடர் - ஆதிவரலாறும் பண்பாடும் (1973)
தென்னாசியக் கலை மரபில் நாட்டிய சாஸ்திர மரபு (1992)
தென்னாசிய சாஸ்திரிய நடனங்கள் - ஒரு வரலாற்று நோக்கு (1998)
தமிழும் தமிழரும் (1998)
இந்துப் பண்பாடு அன்றும் இன்றும் (2005)
தொல்பொருளியல்-ஓர் அறிமுகம் (1972)
ஞானப்பிரகாசரும் வரலாற்றாராய்ச்சியும் (1974)
யாழ்ப்பாணக் காசுகள் (1974)
ஆரியர் ஆதிவரலாறும் பண்பாடும் (1976)
கலாமஞ்சரி ஜ1983ஸ
பரதக்கலை (1988)
சமஸ்கிருதம்- தமிழ் சிற்றகராதி (1987)
தீவகம் - ஒரு வரலாற்று நோக்கு (1990)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக