புதன், 7 ஏப்ரல், 2010

வாழ்விற்கான தேர்தல்!!! நாம் ஏன் இத்தேர்தலில் எம் வாக்குகளை சிதறடிக்காமல் வாக்களிக்க வேண்டும்? -அலெக்ஸ் இரவி ..!

ஒரு பக்கத்தில் வன்னியில் … முதலில் வவுனியா, முல்லைத்திவு, மன்னர் தொகுதிகளை உள்ளடக்கிய வன்னி மாவட்டத்தை எடுத்துக் கொண்டேமேயானால் இங்கு 6 பிரதிநிதிகளை தேர்ந்தேடுப்பதத்ர்க்கு 16 கட்சிகளின் 12 சுயேட்சை குழுக்களின் 253 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் வாக்குகள் பிரிக்கப்படும் நிலையில் இக் கடைசி நேரத்தில் எம் மக்கள் நல்லதோர் முடிவு எடுக்கும் நேரத்தில் நாம் ஏன் நங்கூரம் சின்னத்திற்கு புள்ளடி போட வேண்டும்! என்று சிந்திக்க வேண்டும்
நங்கூரம் சின்னத்தை குறியீடாகக் கொண்டவர்களான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினரின் (DPLF) தாய் மக்கள் அமைப்பான தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினர் (PLOTE ) இன்று மட்டும் தேர்தல் காலத்தில் மக்கள் முன் வரவில்லை. எழுபதுகளின் பிற்பகுதிகளில் வன்னியின் எல்லைக்கிராமங்களிலும் வட கிழக்கப் பகுதிகளில் அகதிகளை குடியேற்றி, அவர்களுக்கு புதிய வாழ்வீயலை உருவாக்குவது. சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தையும், பாட்டாளிவர்க்கப் போராட்டத்தையும் நடத்துவதற்கும் மக்கள் சார்ந்த தலைமையை உருவாக்குவது, பாலர் பாடசாலைகளை நடத்துவது போன்ற பல திட்டங்களை வைத்து, யாழ் மக்கள் மீது மலைய மக்கள் மத்தியில் உருவான தப்பு அபிப்பிராயத்தை போக்குவதற்கு அம் மக்கள் மத்தியில் உள்ள முற்போக்குச் சக்திகளுடன் இணைந்தும், அதுபோல் சிங்கள முற்போக்குச் சக்திகளுடன் இணைந்தும் இலங்கையில் சமத்துவமான அரசியல் நிலையை உருவாக்கி, இனவாதத்தை (சிங்கள-தமிழ்) உதிரவைக்க வேண்டும் என்பதற்கான சமூக அரசியலை உருவாக்குவதற்காக காந்தியம் அமைப்பு உருவாக்கி செயல்பட்டுக் கொண்டுள்ள நேரத்தில் பொதுவுடைமை சிந்தனையிலும் செயல்ப்பாட்டிலும் தோழர் சுந்தரம், சந்ததியார் போன்ற பல இளைஞர்கள் காந்தியத்தில் இணைந்து செயல்பட்டு உமாமகேஸ்வரன் தலமையிலானா தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை தோற்றுவித்தனர்.
அன்று காந்திய வழியில் மீள்குடியேற்றம், சமூக விழிப்புணர்வு, சிறார்களுக்கான பாடசாலைகள், மருத்துவ உதவிகள், பண்ணை முறை என்று மக்களுடன் மக்களாக தோளுக்கு தோள் நின்று சேவை செய்தவர்கள்தான் இந்த கழகத்தார்!
90களில் போர்ச் சூழலில் கால்நடைகள் எல்லாம் நகர வீதியில் திரிந்த நிலையில், வவுனியா நகரம் வெறிச்சோடி இருந்த நிலையில் ஈழத்தின் பல பாகங்களிலும் இருந்து இடம் பெயர்ந்து வந்தோரை வரவேற்று, அவர்கள் குடியமர தேவையான ஒழுங்குகளை செய்து தொடர்ந்தும் வவுனியா நகர சபையை பிரதிநிதிப்படுத்தி இலங்கையிலேயே ஓர் முன் மாதிரியான நகர சபை என்ற பெயருடன் மிளிர செய்தவர்கள் தான் இந்த கழகத்தார்!
இன்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வந்தவர்களின் மீள்குடியேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்றும், இதற்கான உரிய நடவடிக்கைகளை அரசாங்கத்திடம் வலியுறுத்தி முன்னெடுத்து வருபவர்கள் தான் இந்த கழகத்தார்!
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினரின் (DPLF) கடந்தகால வேலைத்திட்டங்கள், அபிவிருத்திப் பணிகள் மக்கள் மத்தியில் எப்படி சிறப்புற நடைபெற்றதோ இப்பணிகளைத் தொடர்வதற்கு மக்களின் பூரண ஒத்துழைப்பும் ஆதரவும் வேண்டும். இதற்கு வரும் பொதுத் தேர்தலில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களுக்கு வன்னி வாழ் மக்கள் பூரண ஆதரவை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
இதே நேரத்தில் வவுனியா மாவட்டத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (DPLF) “நங்கூரம்” சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களையும் (இல – 4), முல்லைத்தீவு மாவட்டம் தண்ணியூற்றை பிறப்பிடமாகக் கொண்ட மக்களுடன் மக்களாக இருந்து பல எதிர்ப்புகள், போராட்டங்களின் மத்தியில் வவுனியா வாழ் மக்களின் தேவைகள், பாதுகாப்பு அறிந்து சேவை செய்து வரும் தோழர் க.சிவநேசன் (பவன்) அவர்களையும் (இல – 2), முன்னால் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அரசாங்கத்திடம் மக்களுக்கு வேண்டியவற்றைப் பெற்று மக்களுக்கு சேவை செய்து, இன்றும் மக்களுடன் மக்களாக இருந்து சேவை செய்து வரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வை. பாலச்சந்திரன் (அவர்களையும் இல– வன்னி மாவட்ட வாக்காளர்கள் பாராளுமன்றம் அனுப்பி தங்களின் உரிமைக்காக குரல் கொடுக்க அனுப்புங்கள்…
கிளிநொச்சி தொகுதி உட்பட்ட யாழ் தேர்தல் மாவட்டத்தை எடுத்துக் கொண்டேமேயானால் இங்கு 9 பிரதிநிதிகளை தேர்ந்தேடுப்பதத்ர்க்கு 15 கட்சிகளின் 12 சுயேட்சை குழுக்களின் 324 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் வாக்குகள் பிரிக்கப்படும் நிலையில் இக் கடைசி நேரத்தில் எம் மக்கள் நல்லதோர் முடிவு எடுக்கும் நேரத்தில் இவ் இக்கட்டான நேரத்தில் பல கட்சிகள் பல விதமாக பிரச்சாரம் செய்யும் நிலையில் யாரை தெரிவு செய்வதின் நிலையில் எமக்காக பாராளுமனறத்தில் எம்மை பிரதிநிதிப்படுத்தி எமக்காக குரல் கொடுத்து எமது
உரிமைகளை மீட்டெடுக்க ஓர் பொது இணைக்கப் பாட்டில்
மக்களுடன் மக்களாக இருந்து மற்றைய கட்சிகளுடன் இணைத்து பங்காற்றுவார்கள் என்று தெரிவு செய்யவேண்டும்.
இங்கு யாழ் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் பாராளுமன்ற கதிரைகளை அலங்கரித்துக்கொண்டு இந்தியாவிற்கும் ஐரோப்பிய நாடுகளிற்கும் வலம் வந்த கூத்தமைப்பினர் திரும்பவும் மக்களை ஏமாற்றி அவர்களின் முதுகில் சவாரி செய்ய உள்ள நிலயில் மக்கள் இவர்களை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.
அதே நேரத்தில் அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுபவர்களின் ”ஜனநாயகம்” ”மாற்று அரசியல்” என்று கூறி மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுபவது மட்டுமல்லாமல் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் தங்களிற்குள்ளேயே கார்களை கொளுத்தி அடிபடும் நிலையில் மக்களை இவர்களையும் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.
இவர்களுக்கு மாற்றாக ஈபிஆர்எல்எவ் பத்மநாபாஅணியின் செயலாளர்நாயகம், தோழர் தி. சிறிதரன் (சுகு) அவர்களுக்கு மெழுகுவர்த்தி sinnaththil இல - 6 இற்கு வாக்களிபத்தின் மூலம் அவர் தாம் இணைந்துள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் இணைந்து மற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து தொடர்ந்து தோழர் சுபத்திரன் எப்படி யாழ் மாநகர சபையில் சேவையாற்றியாரோ அதைப் போன்றி தான் சார்ந்துள்ள மக்கள் தேவைகள் கருதி மக்களுடன் மக்களாக இருந்து சேவையாற்றுவார்.
இவரைப் பற்றி மேலும் கூறுவதென்றால், இவர் மாணவர் காலத்திலிருந்தே ஈழமாணவர் பொதுமன்றத்தில் இருந்து தோழர் நாபா வழியில் பொதுவுடைமை தத்துவத்தின் கீழ் பாதிக்கப்பட்ட…. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து…. சேவை செய்து மக்களுடன் மக்களாக இருப்பவர். அத்துடன் இவரை தெரிவு செய்வதில் இவர் நமது அடிப்படை உரிமைப் பிரச்சனைகள் தீர்வதற்கு, எமது அபிவிருத்திகளுக்கு இந்தியாவிடம் பேசக் கூடியவர். ஆதலால் மக்களுடன் மக்களாக இருக்கும் மக்களின் தேவைகள் அறிந்த தோழர் தி. சிறிதரன் (சுகு) அவர்களை வரப்போகும் பாராளுமன்றதிர்க்கு மெழுகுவர்த்தி இல - 6 சின்னத்தில் தெரிவு செய்வதின் மூலம் நிங்கள் பல பயன் அடைவீர்கள்.
அதே நேரத்தில் வடக்கில் – யாழ் மாவடத்தில் போட்டியிடும் புதிய-ஜனநாயக கட்சியின் (NDP) சுயேட்சைக் குழு 06 ன், சி.கா.செந்திவேல் அவர்களை பாராளுமன்றம் அனுப்பி வன்னி-யாழ் இணைந்த ஒடுக்கப்பட்ட மக்களிற்கான ஓர் பொதுவுடைமை – இடதுசாரி ஒன்றுபட்டு இணைந்த தலைமையை தேர்ந்து எடுப்பதின் மூலம் இவர்கள் ஒன்று சேர்ந்து எமக்காக குரல் கொடுப்பது மட்டுமல்லாமல் எமது தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வார்கள். அத்துடன் இன்று சுயேச்சைக் குழுக்கள் எல்லாம் அரசாங்கக் பணத்தில் நிற்கும் பின்னணியில், “புதிய ஜனநாயகக் கட்சி” (NDP) சுயேச்சைக் குழு மட்டுமே தனித்து தன சொந்தக் காலில் நிற்கும் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டகளப்பு, பட்டிருப்பு, கல்குடா தொகுதிகளை உள்ளடக்கிய மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டேமேயானால் இங்கு 5 பிரதிநிதிகளை தேர்ந்தேடுப்பதத்ர்க்கு 17 கட்சிகளின் 28 சுயேட்சை குழுக்களின் 360 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் வாக்குகள் பிரிக்கப்படும் நிலையில் இக் கடைசி நேரத்தில் எம் மக்கள் நல்லதோர் முடிவு எடுக்கும் நேரத்தில் இவ் இக்கட்டான நேரத்தில் பல கட்சிகள் பல விதமாக பிரச்சாரம் செய்யும் நிலையில் யாரை தெரிவு செய்வதின் நிலையில் எமக்காக பாராளுமனறத்தில் எம்மை பிரதிநிதிப்படுத்தி எமக்காக குரல் கொடுத்து எமது உரிமைகளை மீட்டெடுக்க ஓர் பொது இணைக்கப் பாட்டில் மக்களுடன் மக்களாக இருந்து மற்றைய கட்சிகளுடன் இணைத்து பங்காற்றுவார்கள் என்று தெரிவு செய்ய வேண்டும்.
இதே நேரத்தில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் ஈபிஆர்எல்எவ் பத்மநாபாஅணியின் சிரே~ட தலைவர்களில் ஒருவரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரத்தினம் அவர்கள் . கிழக்கு மாகாணமக்களின் குறைகளைத் தீர்க்க ஆளும் தரப்பினர் உடனடியாக 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் அதில் 19 விடயங்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்துமாறும் கேட்கும் நிலையிலும், கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தின் கீழுள்ள சில ஆயுள்வேத வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமைக்கு தனது ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ள நிலையிலும் , அம்பாறை ஆயுள்வேத வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஆயுள்வேத மருந்தகம் ஆகியன கிழக்கு மாகாண சபையிடமிருந்து மத்திய அரசாங்கத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமை தொடர்பாக ஆட்சேபனை தெரிவித் துள்ள நிலையிலும் முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப்புற எல்லையில் வெளி மாவட்டத்தவர்களின் சட்டவிரோத குடியேற்றங்கள் இடம் பெறுவதாக மாகான சபையினருக்கு சுட்டிக்காட்டி அவற்றை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் மக்களுடன் மக்களாக இருந்து அவர்களின் தேவைகள் உரிமைகள் அறிந்து சேவையாற்றி வரும் நிலையில் அவரை பாராளுமன்றம் அனுப்புவது சிறந்ததாகும்.
மேலும் இங்கு தேர்தலில் களம் இறங்கி இருப்பவர்களை மக்களே நிங்கள் சரி, பிழைகளை சிந்தித்து வாக்களியுங்கள்!
எமது உரிமைகளை யார் இலங்கை அரசாங்கத்திடமும் இந்திய அரசாங்கத்திடமும் நியாயமாக எடுத்துக் கூறி எமக்காக கதைப்பார்களோ அவர்கட்கே எமது வாக்குகளை போட வேண்டும்!
எமக்கு நேர்மையாக யார் எம்மை பிரதிநிதிப் படுதுவார்களோ அவர்கட்கே எமது வாக்குகளை போட வேண்டும்! அரசு+இயல் என்பது அரசியல் ஆகிறது. அதாவது அரசில் இயலாமை உள்ளவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பாதீர்கள்.
இதற்கு இடம்பெயர்ந்து முகாம்களிலும் ஏனைய பகுதிகளிலும் வாழும் மக்களும் அக்கறையின்றி இராது உரிய இடங்களுக்குச் சென்று தமது வாக்குகளை வீணாக்காமல் வாக்களிக்க வேண்டும்.
மேலும் இவர்களைப் பற்றி அறிய:
வாசகர்களின் கேள்விகளும், தோழர் சி.கா.செந்திவேல் அவர்களின் பதில்களும்…..
http://inioru.com/?p=5828
கலைஇலக்கியமும் அரசியலும் : சி. கா. செந்திவேல்
http://inioru.com/?p=1183
தமிழ் மக்களை அவல நிலைக்கும் அரசியல் வறுமைக்கும் கொண்டுவந்து விட்டவர்கள் தமிழ்த் தலைமைகளே கொள்கை விளக்கக் கூட்டத்தில் சி.கா.செந்திவேல்
http://www.uthayan.com/Welcome/full.php?id=2921
தோழர் ஸ்ரீதரனுக்காக
http://www.sooddram.com/pressRelease/Mar2010/Mar292010_PEPRLF.htm
இந்திய எதிர்ப்பு குரல் எழுப்புவதால் தமிழரின் பிரச்சனைகத்க்கு தீர்வு கிட்டாது – தோழர் ஸ்ரீதரன்
http://www.sooddram.com/pressRelease/Mar2010/Mar262010_Sritharan.htm
தோழர் ஸ்ரீதரன் பேட்டி:
http://www.sooddram.com/pressRelease/Mar2010/Mar252010_Sritharan.htm
வட-கிழக்கு மாகான சபையை தமிழர்கள் கை தவற விட்டிருக்கிறார்கள் – வரதராஜ பெருமாள்.
http://www.sooddram.com/pressRelease/Apr2010/Apr052010_VP_GTN.htm
வடகிழக்கை சேர்ந்த 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் இருந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகள் சார்பாக ஜேவிபி குரல் கொடுக்க நேரிட்டது. ஆனால் அவ்விடத்தில் சித்தார்தன் அல்லது அவர் தலைமையில் ஒரிருவர் இருந்திருந்தால் நிலைமைகள் எவ்வாறு இருந்திருக்கும்:
http://www.ilankainet.com/2010/04/blog-post_3947.html
புலம்பெயர் தமிழர்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மகிந்தவுக்கு வசதியான செயற்பாடுகளைச செய்து கொண்டிருக்கிறார்கள்.. -புளொட் தலைவர் த.சித்தார்த்தன்
http://www.athirady.info/2010/04/2010/04/02/65296
வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன்
http://www.athirady.info/2010/04/2010/04/02/65274
தனித்தனிக் கட்சிகளாக இணைந்து செயற்படுவதே பலனளிக்கும்-புளொட் தலைவர் த. சித்தார்த்தன்
http://www.plote.org/reports.php?sscate_id=1078
யுத்தத்தின் பின்பு அடுத்தது என்ன? -புளொட் தலைவர் ஆற்றிய உரை
http://www.plote.org/reports.php?sscate_id=876
மட்டு. மேற்கு எல்லையில் சட்டவிரோத குடியேற்றங்கள் : இரா.துரைரத்தினம் குற்றச்சாட்டு
http://lankamuslim.org/2009/09/11/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/
தாயக உறவுகளே உங்களைத் தாழ்மையுடன் கேட்கிறேன், உங்கள் வாக்குகளை வீணாக்காமல் ஒவ்வொவொரு வாக்கையும் சிந்தித்து போடுங்கள்!
வாக்காளர்களே ஒவ்வோர் வாக்கும் எம் தலை விதியை நிர்மாணிக்கப் போகிறது; இது எம் வாழ்விற்கான தேர்தல்!
ஓர் பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து எமது மக்களின் விடியலிற்காக குரல் கொடுத்து சேவை செய்யக்கூடியவர்கள் யார் என அடையாளம் காணுங்கள்!
யாருக்கு வாக்களிக்கப் போவது என்பது எமது தாயக வாக்காளர்களிலையே தங்கி உள்ளது. ஆனால் அவர்களை சரியான வழியில் வழிநடத்தும் பொறுப்பு எம்மிடமும் உள்ளது.
வாசகர்களே! இணைய செய்தி வாசியும் வாசகர்களே வாக்களிக்கப்போகும் உங்கள் தாயக உறவுகளை அறிவுறுத்துங்கள்!
இந்நேரத்தில் வாக்காளாராகிய நீங்கள் சிந்திக்கும் நேரம்!
வன்னியில் – நங்கூரம்:திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் – இல – 4தோழர் க.சிவநேசன் (பவன்) – இல – 2திரு. வை. பாலச்சந்திரன் – இல – 8
யாழில் – மெழுகுதிரி:தோழர் ஸ்ரீதரன் – இல – 6
யாழில் – கேத்தல்:தோழர் சி.கா.செந்திவேல்
மட்டக்களப்பு
தோழர் இரா.துரைரத்தினம்.
வன்னியிலிருந்த இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு தமிழீழ விடுதலைக் கழகத்தினர் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். அத்துடன் அம்மக்களுக்கு உதவி புரியுமாறு பல தரப்பட்ட அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் வவுனியாவில் நிலை கொண்டுள்ள புளொட் அமைப்பினர் அம்மக்கள் சார்பாக பொது மக்களின் உதவியை நாடி நிற்கின்றனர். இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு புளொட் அமைப்பினூடாக உதவி புரிய விரும்புவோர் அவ்வமைப்பின் கொழும்புக் கிளையை தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுவதுடன் நிதிஉதவி செய்ய விரும்புவோர் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வங்கிக்கணக்கிற்கு உங்கள் பேருதவிகளை அனுப்புமாறு வேண்டப்படுகின்றனர்…
இலங்கை வங்கி,
கிளை: பம்பலபிட்டிகணக்கின் பெயர்: D.P.L.Fகணக்கு இலக்கம்: 718534 Swift code: BCEYLKLXகாரியாலய முகவரி: 16, Haig Road, Colombo-04.தொலைபேசி இல: 0094112586289 0094112586289
மேலும் ஓர் அரசாங்க உதவியோ, முதலீடுகளோ இல்லாமல் மக்களின் சேவைகருதி இன்று உங்கள் முன் நிற்கும் புதிய ஜனநாயகக் கட்சியினருக்கு உதவி செய்ய விரும்புவோர் அவர்களை தொடர்பு கொண்டு கீல் வரும் அவர்களின் வங்கியில் பணம் செலுத்தலாம்.
K. Senthivel ; V. Mahendran
A/C No- 1570018335
Commercial Bank, Grandpass Branch, Colombo – 14
K. Senthivel
A/C No – 096020043126.
Hatton National Bank, Kotahena Branch, Colombo – 13
நன்றி! என்றும் தோழமையுடன்.. அலெக்ஸ் இரவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக