சனி, 23 மே, 2015

இலங்கை – ஜேர்மனி வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு…!!

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் ஃப்ரேங் வால்டர் ஸ்ரெயின்மெரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன் போது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து இரண்டு தரப்புக்கும் இடையில் பேசப்பட்டுள்ளது.

இலங்கையில் மீண்டும் ஜனநாயகத்தை ஏற்படுத்துதல், மறுசீரமைப்பு போன்ற விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.


அத்துடன், சர்வதேச சமுகம் மற்றும் அமைப்புகளுடன் சுமூக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான இலங்கையின் முயற்சி குறித்தும் அமைச்சர் மங்கள சமரவீரவினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிர்வாக துறை சார்ந்தவகள் ஆளுனர்களாக நியமிக்கப்பட்டமை, அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் பல நீக்கப்பட்டுள்ளமை, மற்றும் காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் குறித்தும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

அத்துடன் வெளிநாடுகளில் அகதிகளாக உள்ள இலங்கையர்கள் மீளழைக்கப்பட்டுள்ளமை குறித்தும் அமைச்சர் மங்கள சமரவீர, ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சரிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக