ஞாயிறு, 9 நவம்பர், 2014

கங்கை கரையை சுத்தப்படுத்தும் நடவடிக்கை பிரதமர் மோடி தலைமையில் ஆரம்பம்…!!

வாரணாசிக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி கங்கை கரையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

நபரொருவர் கிராமமொன்றை பொறுப்பேற்று அதனை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் , பிரதமர் வாரணாசியின் ஜெயாப்பூர் கிராமத்தை பொறுப்பேற்றார்.

இதன்பின்னர் இன்று காலை அங்குள்ள கங்கைக் கரையின் ஆசி காத் பகுதிக்கு சென்று மண்வெட்டியை கொண்டு சுத்தம் செய்ததாக இந்திய ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

தூய்மை இந்தியா திட்டத்தில் இணையுமாறு ஒன்பது பேரின் பெயரை பரிந்துரைத்துள்ளதுடன் அவர்களை இந்த திட்டத்தில் ஈடுபடுமாறு நரேந்திரமோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

உத்திரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், கிரிக்கெட் வீரர்கள் மொஹமட் கைஃப், சுரேஷ் ரெய்னா, ராஜூ ஸ்ரீவத்சா, அமைச்சர் மனோஜ் திவாரி, பாடகர் கைலாஷ் கர், மனுஷ்ரமா, பத்மஸ்ரீ தேவிஸ்ரீ பிரசாத் திவேதி, சுவாமி ரம்பாதரச்சாரியா ஆகிய 9 பிரபலங்களை இந்த தூய்மை இந்தியா
திட்டத்தில் இணைய வேண்டும் இந்திய பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக