வியாழன், 6 நவம்பர், 2014

செல்வம் அடைக்கலநாதன் டெனீஸ்வரன் கோத்தபாயவுடன் சந்திப்பு..!!

த.தே.கூட்டமைப்பின் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன், மன்னார் மறைமாவட்ட ஆயாருக்கும் பாதுகாப்பு செயலாளருக்குமிடையே நேற்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் வாசஸ்த்தலத்தில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக மேலும் தெரியவருவது,

மன்னாரில் உள்ள முள்ளமுனை கிராமக்குடியேற்றம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவுடன் சந்திப்பதற்காக த.தே.கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் மன்னார் மறைமாவட்ட ஆயார் ஆகியோர் நேற்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் சந்தித்து உரையாடியுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை சந்திப்பதற்கான நேரத்தினை செல்வம் அடைக்கலநாதனூடாக கேட்டபோது அதற்கான நேரத்தினை நேற்று 5.00-5.30 மணிவரை ஒதுக்கியிருந்தார் அதற்காகவேண்டி இவர்கள் மூவரும் நேற்று 4.00மணிக்கே அங்கு சென்றிருந்தார்கள்.


குறித்த நேரத்திற்கு ஒரு மணித்தியாலத்திற்குப் பின்னர் அங்கு வருகைதந்த பாதுகாப்பு செயலாளர் வெறும் ஐந்து நிமிடங்கள் மாத்திரமே அவர்களிடம் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக