வியாழன், 6 நவம்பர், 2014

மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி தனி மாடி வீடுகள் ஆறுமுகன் தொண்டமான் அறிவிப்பு..!!

கொஸ்லாந்தை மீரியபெத்தை மண்சரிவினால் பாதிக்கப்பட்டு அகதிகளாகி பூனாகலை பாடசாலையில் தங்கிருக்கும் மக்களை, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இன்று சந்தித்துப் பேசினார்.
இதன்போது அமைச்சர் அங்கு உரையாற்றுகையில்….

தேசிய கட்டட நிர்மாண ஆய்வு நிலையத்தின் பரிசோதனையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட இடமான பூனாகலை அம்பட்டிகந்தை தோட்டப்பகுதியில், மீரியபெத்தை மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவருக்கும் தனி தனி மாடிவீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும். அத்துடன் பாதிக்கப்பட்ட ஏனையவர்களுக்கும் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

அத்தோடு மீரியபெத்தை மண் சரிவினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை அரசாங்கம் பொறுப்பேற்றாலும் ஒவ்வொரு பிள்ளைக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் வங்கி சேமிப்பு புத்தகத்தில் தலா 2 ½ இலட்சம் ருபா வங்கியில் வைப்பிலிட்டு புதிதாக சேமிப்பு புத்தகம் வழங்கப்படும்.

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி நடடிவடிக்கைக்காக சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் ஊடாக உதவிகள் வழங்கப்படும்.  மலையக பகுதியில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் படிப்படியாக வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


இந்த சந்திப்பில் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக