வியாழன், 2 அக்டோபர், 2014

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் தாக்குதலை தொடங்கியது அரசாங்கம்: கபே குற்றச்சாட்டு!!



எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காக கொண்டு அரசாங்கம் எதிர்க்கட்சிகளை அடக்கும் வழிமுறைகளில் ஈடுபட்டு வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சியின் செயற்பாட்டாளர்களை மௌனமாக்குவதற்காக அண்மையில் சில தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கை சம்பந்தமான கூட்டம்
ஒன்று நடைபெறவிருந்தது. கூட்டம் நடைபெறவிருந்த வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் பெற்ரோல் குண்டும் வீசப்பட்டுள்ளது.

கடந்த தினங்களில் எதிர்க்கட்சி மற்றும் அதன் ஆதரவாளர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

பலமான உதவிகளுடன் எதிர்க்கட்சிகளின் அரசியல்வாதிகளை இலக்கு வைத்து அரசாங்கம் பல தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதல் அதிகரிக்கக் கூடும் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக