வியாழன், 2 அக்டோபர், 2014

வவுனியாவில் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு RISE அமைப்பால் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு


வவுனியா செக்கடிப்புலவு அ.த.க. பாடசாலையில் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு வறிய மாணவர்களுக்கு RISE  அமைப்பால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வு நேற்று புதன்கிழமை (01.10) அன்று காலை 10.00 மணியளவில் அதிபர் திருமதி.திலகரத்தினம் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் உரையாற்றிய அதிபர், வறிய மாணவர்களின் கல்வி
வளர்ச்சிக்கு உதவும் இவ் அமைப்பை பாராட்டுவதாகவும், இளைஞர்களால் உருவாக்கப்பட்ட RISE  அமைப்பானது எதிர்வரும் காலங்களில் பல சேவைகளை ஆற்ற வேண்டும் எனவும் கூறினார்.

இந் நிகழ்வில் உரையாற்றிய RISE  அமைப்பின் உபதலைவர் திரு.செ.பிரியங்கன் தெரிவிக்கையில், வறிய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு எம்மாலான உதவிகளை நாம் தொடர்ந்து செய்வோம் எனவும், சமூகத்தின் தேவைகளை நாம் இயலுமான வரை பூர்த்தி செய்வோம் எனவும் கூறினார்.

தொடர்ந்து பாடசாலை மாணவர்களினால் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் RISE  அமைப்பின் உபதலைவர் பிரியங்கன், செயலாளர் ஜனார்த்தன், நித்திலன், ரிநோத், நிக்ஸன், கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக