வியாழன், 2 அக்டோபர், 2014

நந்திக்கடலில் கரையொதுங்கும் மீன்கள்: அதிர்ச்சியில் மீனவர்கள்!!


நந்திக்கடல் வடக்காறு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக அப்பிரதேச மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இன்று சுமார் 50 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான மீன்கள் இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலாப்பி, கெளிறு, மணல், மன்னா, கூறல் போன்ற மீன் வகைகளே இவ்வாறு
இறந்த நிலையில் கரையொதுங்குவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கரையொதுங்கி வரும் மீன்களை வட்டுவாகல் கிராமிய கடற்தொழில் மீன்பிடி கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து கறைத்துறைப்பற்று பிரதேச சபை மற்றும் மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் இணைந்து துப்பரவு செய்யும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக