ஞாயிறு, 22 ஜூன், 2014

அரச சார்பற்ற மத நிறுவனங்களை தடை செய்வது குறித்து கவனம்....!!!!

அரச சார்பற்ற மத நிறுவனங்களை தடை செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
சர்வதேச சக்திகளுடன் இணைந்து,  மதக் கடும்போக்குவாதத்தை பிரசாரம் செய்யும் அரச சார்பற்ற நிறுவனங்களே இவ்வாறு தடை செய்யப்பட உள்ளன.

ஏழு நாடுகளிடமிருந்து நிதி உதவி பெற்றுக்கொண்டு செயற்படும் 14 அரச சார்பற்ற மத நிறுவனங்கள் இலங்கையில் இயங்கி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றன. இது தொடர்பான இரகசிய புலனாய்வு அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

ஓர் கடும்போக்குடைய அமைப்பில் 150 ஆயுததாரிகளும் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இவற்றில் பத்து கடும்போக்குடைய மத அரச சார்பற்ற நிறுவனங்கள் கொழும்பில் இயங்கி வருகின்றன.

நாட்டில் இடம்பெற்ற போர் தொடர்பான விடயங்கள் குறித்தும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் அதீதமான பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன.

இந்த நிறுவனங்களுக்கு பணம் கிடைக்கும் வழிமுறைகள் தொடர்பில் மத்திய வங்கியின் ஊடாக விசாரணை நடத்தப்பட உள்ளது.

இதேவேளை,  மத அமைப்பு ஒன்றின் தலைவர் ஒருவர் ஸ்கன்டிநேவிய நாடொன்றுடன் மிக நெருக்கமான உறவினை பேணி வருகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அந்நாட்டின் உளவுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் இலங்கை குடியுரிமை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வன்னி இராணுவ நடவடிக்கைகள் குறித்து இந்த நபர் தகவல்களை வழங்கியுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக