சனி, 3 அக்டோபர், 2009

வெளிநாடு சென்றுள்ள எமது நிபுணர்களை தாயகம் திரும்புமாறு ஜனாதிபதி அழைப்பு

எத்தகைய தடைகள் வந்தாலும் அரசாங்கத்தின் பயணம் தொடரும். நாட்டைக் கட்டியெழுப்ப வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள கல்விமான்கள், நிபுணர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார். வெளிநாட்டுச் செலாவணியில் மட்டும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, பொறியியலாளர்கள் துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்பு நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் மிக அவசியமானதெனவும் தெரிவித்தார்.
இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் 103வது வருடாந்த நிகழ்வு நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர்கள் பி. தயாரத்ன, மனோ விஜேரத்ன மற்றும் பொறியியல்துறை நிபுணர்கள், கல்விமான்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;
நாட்டின் தீர்க்கமானதொரு காலகட்டத்தில் இலங்கை பொறியியலாளர் நிறுவனம் தமது 103வது நிறைவைக் கொண்டாடுகிறது. அதற்கு எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். இந்நாட்டில் பொறியியலாளர்கள், கல்விமான்கள் மட்டுமன்றி சகல துறையினரையும் அச்சுறுத்திய யுகத்துக்கு அரசாங்கம் முடிவு கட்டியுள்ளது. துப்பாக்கியால் மீட்கப்பட்ட நாட்டை கலப்பையினால் பாதுகாத்துக் கட்டியெழு ப்பும் யுகம் தற்போது உருவாகியுள்ளது.
நாம் இந்த நாட்டில் பில்லியன் கணக்கில் நிதியைச் செலவிட்டு வீடுகள், பாலங்கள் என நிர்மாணித்தாலும் பயங் கரவாதிகள் ஒருகுண்டை வெடிக்க வைத்து அவற்றை அழித்தனர். வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை அங்கு பாரிய நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள அரசாங்கம் அஞ்சிய காலகட்டமொன்று இருந்தது. அந்த யுகத்துக்குத் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. படையினர் இந்த நாட்டை மீட்டு அபிவிருத்தியில் கட்டி யெழுப்புவதற்காக எம்மிடம் கையளித் துள்ளனர்.
அரசாங்கம் தற்போது நாட்டின் சகல பகுதிகளிலும் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுக ளிலிருந்து அதற்குத் தேவையான இயந்திர உபகரணங்களும் இந்நாட்களில் கொள்வனவு செய்யப்படுகின்றன. மஹாவலி போன்ற திட்டங்கள் தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு, தெற்கு என எப்பக்கம் சென்றாலும் அபி விருத்தியும் பல்வேறு நிர்மாண நட வடிக்கைகளும் இடம் பெறுவதை நாம் நேரில் காணலாம். வரலாற்றில் முன் னொருபோதுமில்லாத வகையில் அபி விருத்தித் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
எமது தாய்நாடு என்ற உரிமையும் உணர்வும் நாட்டு மக்களிடையே காணப்படுகிறது. வருடந்தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொறியியலாளர்கள் எமது பல்கலைக் கழகங்களினால் உருவாக்கப்படுகின்றனர். இவர்கள் தொழில், பிள்ளைகளின் கல்வி என பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு செல்கின்றனர்.
சிலர் இந்த நாட்டில் இருப்பது வீண் என்று நினைக்கின்றார்கள். யுத்தம் எமது பொறியியலாளர்களுக்கும் கல்விமான்களுக்கும் ஒரு சாபமாக அமைந்ததை நாம் ஏற்றுக்கொள்ள வேண் டும். இன்று பயங்கரவாதம் முற்றாக ஒழிக் கப்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடி யும் என்ற நம்பிக்கை சகல இன, மத மக்கள் மத்தியிலும் உருவாகியுள்ளது. இந்நிலையில் நமது பொறியியலாளர்கள் நிபுணர்கள் கல்விமான்கள் நாட்டில் இருக்கவேண்டும். அந்நியசெலாவணியால் மட்டும் நாட்டைக் கட்டியெழுப்ப முடி யாது. கல்விமான்கள் புத்திஜீவிகளின் சேவை மிக அவசியமாகிறது.
பொறியியலாளர் கூட்டுத்தாபனம் தனியாருக்குக் கையளிக்கப்படவிருந்த காலமொன்று இருந்தது. அதற்காக சிலர் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர். திறமையான பொறியியலாளர்கள் ஒரு நாளில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அந்த நிலை இன்று மாற்றம் பெற்றுள்ளது. அரசாங்கம் தேசிய நிர்மாணக் கொள்கை யொன்றை உருவாக்கியுள்ளது. இத்துறையை மேலும் கட்டியெழுப்ப கல்விமான்கள் மற்றும் நிபுணர்களின் சேவையைப் பெற் றுக்கொள்ளவுள்ளோம்.
நிர்மாணத்துறை ஒப்பந்தங்களை வெளிநாட்டவருக்கு வழங்குவதை நாம் வெகுவாகக் குறைத்துள் ளதுடன் நம் நாட்டு ஒப்பந்தக்காரர்களுக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நாட்டின் அபிவிருத்தி மற்றும் மக்கள் செயற்பாடுகளுக்காக நாம் கடன்களைப் பெறுகிறோம். எனினும் எவ்வித நிபந் தனைக்கும் நாம் அடிபணிந்து அவற்றைப் பெறவில்லை. எமக்குக் கடன் கொடுக்க வேண்டாமெனவும், ஜீஎஸ்பி சலுகையை எமக்கு வழங்கக் கூடாதெனவும் சில சக்திகள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றன.
பொறியியல்துறையில் நாட்டை நேசி க்கும் முன்னுதாரணமான பொறியியலாளர்கள் பற்றி நாம் குறிப்பிடவேண்டும். இரணைமடுக் குளத்திலிருந்து வெளியேறும் நீரை வாய்க்கால் மூலம் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்ல எஸ். ஆறுமுகம் ஆலோசனை முன்வைத்தார். ஆறுகள் இல்லாத யாழ்ப்பாணத்துக்கு ஆற்றை வழங்க அவர் முயற்சித்தார். இது மனிதாபிமானமாக சிந்திக்கும் செயல். அவ்வாறு இடம்பெற்றால் யாழ்ப்பாணம் மறு மலர்ச்சிபெறும்.
பொறியியலாளர்களால் இனங்களுக்கி டையிலான பாலத்தை மட்டுமன்றி மனி தாபிமான பாலத்தை உருவாக்கவும் முடியும். இது நாட்டுக்கு என்ன செய்யலாம் என சிந்திக்கின்ற யுகம். அவ்வாறு சகல ரும் சிந்தித்தால் நாடு பெறுமதியானவற்றை பெற்றுத் தருவது உறுதி என்பதே எனது நம்பிக்கை. இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக