புதன், 1 அக்டோபர், 2014

கன்சர்வேட்டிவ் கட்சியின் மாநாட்டில் அழைப்பின்றி கலந்து கொண்ட இலங்கை மத்திய வங்கி ஆளுநர்...!!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சியின் மாநாட்டில் அழைப்பின்றி கலந்து கொண்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
பஹர்மின்ஹாம் ஐ.சீ.சீ. மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

அரச அதிகாரிகளுக்கு மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை என மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்த போதிலும் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதியாக மாநாட்டில் கலந்து கொள்வதாக கப்ரால் கூறியுள்ளார்.


இங்கிலாந்தின் அரச அதிகாரிகள் இப்படியான அரசியல் மாநாட்டில் கலந்து கொண்டால், அவர்கள் பணியை விட்டு உடனடியாக விலகி செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் என ஏற்பாட்டாளர்கள் கப்ராலிடம் கூறியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள கப்ரால் தனது நியமனம் அரசியல் நியமனம் என குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இங்கிலாந்திற்கு 5 நாள் பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கன்சர்வேட்டிவ் கட்சியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் அந்த கட்சியின் மாநாட்டில் நேற்று கலந்து கொண்டார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக