வடமாகாணத்தில் பனைசார் உற்பத்தியை மேம்படுத்த பனை ஆராய்ச்சி மாநாடு இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. பனை ஆராய்ச்சி நிறுவனம், பனை அபிவிருத்தி சபை, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு ஆகியன இணைந்து வடபகுதியில் முதல்முதலாக இந்த மாநாட்டை நடத்துகின்றன.
பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் வடபகுதியில் பனை வள ஆராய்ச்சி பனவளம் சார்ந்த
கைத்தொழில்களை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் பல்வேறு தரப்பினரும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட அரசஅதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம், செயலர் சிவஞானசோதி மற்றும் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக