புதன், 18 ஜூன், 2014

நாடாளுமன்ற அமர்வை மு.கா. எம்.பிக்கள் புறக்கணிப்பு!!

முஸ்லிம் மக்களுக்கு எதிராக அளுத்கம,பேருவளை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளைக் கண்டித்து, தமது கட்சியைச் சேர்ந்த நாமாளுமன்ற உறுப்பினர்கள் இன்றை நாடாளுமன்ற அமர்வைப் புறக்கணிப்பர் என்று நீதி அமைச்சரும் மு.கா.கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

 ஐ.நா. விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது என்று
வலியுறுத்தி நேற்றும் இன்றும் நாடாளுமன்றில் விவாதம் இடம்பெற்றது. இன்று பிற்பகல் அமர்வில் அது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் மு.கா. இந்த முடிவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக