இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிய, வெறுப்புணர்வுகளைத் தூண்டும் செயற்பாடுகள் குறித்து அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கவலை வெளியிட்டுள்ளன.
தென்னிலங்கையில் அளுத்கமவிலும், அதன் அருகிலுள்ள பகுதிகளிலும், கடந்த 15 ஆம் திகதி முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைசம்பவம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறைக்காகப் பேசவல்ல ஜென் ப்சாக்கி, கருத்து
வெளியிடுகையில், மதச் சிறுபான்மையர்களைப் பாதுகாக்க இலங்கைக்கு இருக்கும் கடப்பாடுகளை அது நிறைவேற்றவேண்டும்.
அத்துடன் நடந்த வன்செயல்கள் குறித்து முழு விசாரணை தேவை என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை ஐரோப்பிய ஒன்றியமும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக இழைக்கப்படும் சமீபத்திய வன்முறைகள் தமக்கு கவலையளிக்கிறது என்று கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழு தெரிவித்திருக்கிறது.
இனவாத வன்முறை, வெறுப்பைத் தூண்டும் செயல்களால் இலங்கையின் ஸ்திரத்தன்மையை பேணமுடியாது. நாங்கள் சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்யவே இலங்கை அரசைக் கோருகிறோம். அதற்காக இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் தயாராகவுள்ளோம் என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக