புதன், 18 ஜூன், 2014

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக யாழில் போராட்டம் - த.தே.ம.முன்னணி அறிவிப்பு!!


களுத்துறையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பங்குகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே கட்சியின் தலைவர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களை வன்மையாகக் கண்டிகிறார் எனத் தெரிவித்த கஜேந்திரகுமார், வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20-06-2014) காலை 9மணிக்கு யாழ்.பேருந்து நிலையம் முன்பாக கவன ஈர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்தப் போராட்டத்துக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆதரவு தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்ட கஜேந்திரகுமார், அடுத்தவாரம் கிளிநொச்சியிலும் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக