மாத்தளையில் நடமாடும் கருக்கலைப்பு நிலையமொன்றை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.
முச்சக்கர வண்டியொன்றில் இந்த சட்டவிரோத கருக்கலைப்பு மையம் நடத்தப்பட்டு வந்துள்ளது.
சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி வைத்தியர் மற்றும் அவரது உதவியாளரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் பொலிஸ் உத்தியோகத்தர்
ஒருவரும் கருக்கலைப்பு செய்து கொள்ளும் போர்வையில் சென்று, சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர்.
20 ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களைப் பயன்படுத்தி முச்சக்கர வண்டியிலேயே கருக்கலைப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்காக 18000 ரூபா அறவீடு செய்யப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு மேலதிகமாக முச்சக்கர வண்டிக் கட்டணமும் அறவீடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கண்டி, மாத்தளை, குருணாகல் ஆகிய பிரதேசங்களில் இந்த நபர்கள் 200க்கும் மேற்பட்ட சட்டவிரோத கருக்கலைப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக