சனி, 14 ஜூன், 2014

வவுனியாவில் “தேன்” புரக்கேறியதில், கிராம அலுவலர் மரணம்!!


தேன் புரக்கேறியதால் கிராம அலுவலர் ஒருவர் மரமடைந்த சம்பவம் வவுனியாவில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. வவுனியா, கத்தார் சின்னக்குளத்தில் உள்ள தனது கிராம அலுவலகத்தில் இருந்த தேன்கூட்டை பிரித்து அதில் உள்ள தேனை பருகிக்கொண்டிருந்த போது தேன் கூட்டின் வதையில் இருந்த தேன்குழவி ஒன்று கொட்டியதால் அதனை தடுக்க முற்பட்ட வேளை தேன் புரக்கேறி குறித்த கிராம அலுவலர் மரணமடைந்துள்ளதாக வவுனியா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கள்ளிக்குளம், கத்தார்சின்னக்குளம் ஆகிய பிரிவுகளில் தற்போது கிராம
அலுவலராக பணியாற்றிய எஸ்.பெனடிற் (வயது 59) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக