இலங்கையில் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் முன்னெடுக்கப்படும் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும்படி இலங்கை அரசை ஐ.நா. செயலாளர் நாயகம் ஊக்குவிக்கின்றார் என ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான ஹக் தெரிவித்தார். "இலங்கை தொடர்பான மனித உரிமைகள் அமைப்புக்களின்
நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும்படி நாம் கோருகின்றோம்.
இலங்கையில் யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகளில் உள்ள நெருக்கடிகளையும் சவால்களையும் செயலாளர் நாயகம் முழுமையாக உணர்ந்துள்ளார். அதனால்தான் சர்வதேச சமூகத்துடன் ஆக்கபூர்வமாக ஈடுபட்டு, அதன் மூலம் தற்போதுள்ள உள்நாட்டுப் பொறிமுறை நடவடிக்கைகளை மனித உரிமைகளை மதித்துப் பேணும் விதத்தில் வலுப்படுத்தி, இலங்கையில் நிரந்தரத் தீர்வுக்காகப் பணியாற்றுமாறு இலங்கை அரசை செயலாளர் நாயகம் ஊக்குவிக்கின்றார்." - என்றும் இன்று செய்தியாளர்களுக்கு தகவல் வெளியிட்டார் பேச்சாளர் ஹக்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக