புத்தகம் வாங்குவதற்காக வவுனியா பஸ்தரிப்பிடத்திற்குச் சென்றேன். அங்கு வாகனத்துடன் நின்றிருந்த சிலர் என்னை அழைத்து கண்களைக் கட்டி பலவந்தமாக ஏற்றிச் சென்றனர். விடுவிக்கும் நாள் வரை நான் எங்கிருந்தேன் என்பது எனக்குத் தெரியாது. - இவ்வாறு தெரிவித்திருக்கிறார் வவுனியாவில் கடத்தப்பட்டு மீண்டுவந்துள்ளவரான உயர்தர மாணவனான மகாலிங்கம் ரஜீவன். கடந்த 27 ஆம் திகதி வீட்டிலிருந்து சந்தைக்குச் சென்ற மாணவன் தான் கொண்டு சென்ற பயிற்றங்காயை விற்பனை செய்துவிட்டு அங்கிருந்த புத்தக நிலையம் ஒன்றில் புத்தகம் வாங்கி வருகிறார் எனத் தெரிவித்துவிட்டு
வீட்டிலிருந்து புறப்பட்டார். எனினும் அந்த மாணவன் திரும்பி வரவில்லை. இதுகுறித்து பொலிஸ் நிலையம் உட்பட பல இடங்களில் உறவினர்கள் முறைப்பாடு செய்தனர். எனினும், மாணவன் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்றிரவு கண்கள் கட்டப்பட்ட நிலையில் அவனது வீட்டுக்கு அருகில் வாகனம் ஒன்றில் கொண்டுவரப்பட்டு விடப்பட்டுள்ளான் சிறுவன். உடல் சேர்ந்த நிலையில் காணப்பட்ட அவனை உறவினர்கள் வவுனியா பொதுமருத்துமனையில் சேர்த்துள்ள்னர். மருத்துமனைல் சேர்க்கப்பட்ட ரஜீவன் தனக்கு நிகழ்ந்ததை பின்வருமாறு விவரிக்கிறார். "வவுனியா சந்தைக்கு முன் உள்ள புத்தக நிலையத்தில் நான் வாங்கச் சென்ற புத்தகம் இருக்கவில்லை. இதனால் பஸ் நிலையத்திற்குச் சென்றேன்.
பஸ் நிலையத்திற்குப் பின்புறமாக வாகனத்துடன் நின்ற சிலர் என்னை அழைத்து கதை கேட்டனர். அத்தோடு திடீரெனப் என்னைப் பிடித்து வாகனத்தில் ஏற்றி கண்களையும் கட்டினர். அதற்குப் பின் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. "அடர்ந்த காட்டுக்குள் ஒரு தரப்பாள் கொட்டில், அங்கேதான் எனது கண்கள் கட்டிப்பட்டிருந்த துணி அவிழ்க்கப்பட்டது. என்னைச் சூழ நான்கு பேர் நின்றிருந்தனர். அவர்கள் நால்வரும் துப்பாக்கிகளை ஏந்தியிருந்தனர். ஒருவர் தலைமுடி வளர்த்திருந்தார்.
சாரளமாக தமிழிலேயே பேசினர். தினமும் இரண்டு பேர் வெளியில் சென்று சாப்பாடு எடுத்து வருவார்கள். ஒருவேளை சாப்பாடு மட்டும் எனக்குத் தந்தனர். "கடந்த 6ஆம் திகதி காவலில் நின்ற இருவரும் நித்திரையாகிவிட்டனர். அந்த வேளையிலேயே அவர்களது தொலைபேசியை எடுத்து எனது வீட்டாருடன் தொடர்பு கொண்டன். ஆனாலும் நான் எங்கிருக்கிறேன் என எனக்குத் தெரியாததால் வீட்டாருக்கு தெரியப்படுத்த முடியவில்லை. "இந்த நிலையில் நேற்றிரவு என்னை வாகனத்தில் ஏற்றிய அவர்கள் கிட்டத்தட்ட 2 மணித்திலாயங்களின் பின்னர் வீட்டுக்கருகில் கொண்டு வந்து விட்டனர். "இதைவிட எனக்கு எதுவுமே தெரியாது" - இவ்வாறு தெரிவித்தார் அந்த மாணவன். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக