புதன், 18 ஜூன், 2014

மீசாலையில் விபத்து; ஒருவர் படுகாயம்!!


மீசாலை, இராமாவல் பகுதியில் ஏ - 9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயடைந்த ஒருவர் யாழ்.போதனாவைத்தியாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மீசாலை கிழக்கைச் சேர்ந்த சிவகுரு செல்வராசா (வயது- 52) என்பவரே இரண்டு கால்களிலும் படுகாயமடைந்துள்ளார்.

இவர் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக
சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். சைக்கிளில் சென்ற குறித்த நபரை எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதியது என்று தெரிவிக்கப்பட்டது. விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக