புதன், 18 ஜூன், 2014

நீதியான விசாரணை நடத்தப்படும்; பேருவளையில் ஜனாதிபதி உறுதி!!

அளுத்கம, பேருவளைப் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்படும் இவ்வாறு உறுதியளித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. இன்று பிற்பகல் பேருவளைக்குச் சென்ற ஜனாதிபதி களுத்துறை மாவட்ட செயலகத்தில் முஸ்லிம் மற்றும் பௌத்த சமூகத்தவர்களுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தினார். இதன்போதே அவர் இந்த உறுதி மொழியை வழங்கினார்.

தனிநபருக்கோ குறிப்பிட்ட சமூகத்துக்கோ தீங்கு விளைவிக்க நாம் யாரையும்
அனுமதிக்க முடியாது என்றும் பௌத்த மற்றும் முஸ்லிம் சமூகங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அமைதியாக வாழவேண்டும் என்றும் - ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். அத்துடன் வன்முறை காரணமாகப் பாதிக்கப்பட்ட வீடுகள்,வர்த்தக நிலையங்களைப் புனரமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக