திங்கள், 30 ஜூன், 2014

25ஆவது வீர மக்கள் தினத்தை முன்னிட்டு தேசிய ரீதியில் சாதனை புரிந்த மாணவி கௌரவிப்பு!!!(படங்கள் இணைப்பு)

(ஓவியன்) வவுனியா திருநாவற்குள ஐயனார் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழாவில், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க சமூக ஆர்வலரும் புளொட் அமைப்பின் லண்டன் கிளையின் முக்கியஸ்தருமான  திரு த.நாகராஜா(பொக்கன்) அவர்களினால் வழங்கப்பட்ட சிறு தொகைப்பணம் மாணவியின் விளையாட்டுத்துறையை ஊக்குவிப்பதற்காக திரு க.சந்திரகுலசிங்கம் அவர்கள் செல்வி. லேகாயினியிடம் கையளித்தார்.

இவ் மாணவி மாகாண மற்றும் தேசிய ரீதியில் நடைபெற்ற 400மீற்றர், 400மீற்றர் தடைதாண்டல் ஓட்டம், 200மீற்றர் போட்டிகளில் மாவட்டத்தின் பெருமையை நிலைநாட்டியமைக்காக இவ் சிறு உதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் தொடர்ந்தும் தனது திறமையினை தேசிய மட்டத்தில்  நிலை நாட்ட பூர்வீகம் இணையம், கோவில்குளம் இளைஞர் கழகத்துடன் இணைந்து  தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக