ஞாயிறு, 29 ஜூன், 2014

வவுனியா "அம்மன் விளையாட்டுக் கழக" அபிவிருத்திக்கு திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் நிதியுதவி!! (படங்கள் இணைப்பு)

(ஓவியன்) வவுனியா தெற்கிலுபைக்குள அம்மன் விளையாட்டுக் கழகத்தின் அபிவிருத்திக்கென, புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், கோவில்குள இளைஞர் கழக ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களினால் கழகத்தின் அபிவிருத்திக்கென  ஒரு தொகைப் பணம் இன்று (28/06) கழகத்தின்  தலைவரிடம் கையளிக்கப்பட்டது. 

இவ் நிகழ்வில் புளொட் முக்கியஸ்தரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினருமாகிய திரு ஆர்.இராஜசேகரம் (சேகர்) அவர்களுடன் அம்மன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் கழக உறுப்பினர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 


நிகழ்வில் கருத்து தெரிவித்த திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள்    எமது சமூகத்தில் கல்வியும், விளையாட்டும் மிகவும் முக்கியமானவை. நாம் இன்றும் தலைநிமிர்ந்து நிற்பதுக்கு அவையே எமது இரு கண்கள் போல் அமைகிறது. எனவே இளைஞர்கள் நாங்கள் எமது சமூகத்தில் அதீத கவனத்துடன் செயலாற்றி, சிறந்த சமூக விழுமியங்களை கொண்ட பல தலைவர்களை உருவாக்க நாம் என்றும் ஊன்றுகோலாய் இருக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.  









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக