இலங்கையின் அனுபவத்தை பெற்று நைஜீரியாவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக நைஜீரிய இராணுவ உயரதிகாரி மார்சல் அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை குறித்து இலங்கையின் உயர் இராணுவக்குழு நைஜீரியாவில் பயிற்சிகளை வழங்கியுள்ளது.
இந்த பயிற்சிகளின் போதே நைஜீரிய இராணுவ உயரதிகாரி மார்சல் அலெக்ஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்தக் குழு நைஜீரியாவின் இராணுவ தலைமையகத்தில் இந்த நிகழ்வை நடத்தியது என்று நைஜீரியா தகவல்கள் தெரிவிக்கின் றன.
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய கூட்டுப்படைகளின் தளபதியுமான ஜெகத் ஜெயசூரிய தலைமையிலான குழுவே இந்த பயிற்சிகளை வழங்கியது. இதில் இராணுவ மற்றும் கடற்படை உட்பட்ட புலனாய்வு அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர்.
ஆசிய நாடு ஒன்றில் பயங்கர வாதத்தை முறியடித்த நாடு என்ற அடிப்படையில் அதன் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வகையிலேயே இந்தப் பயிற்சி வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக