ஞாயிறு, 7 டிசம்பர், 2014

பல்வேறு தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டு..!!

பல்வேறு தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு விதி மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக தோதல் கண்காணிப்பு அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

ஆளும் கட்சியினர் இவ்வாறு விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

சட்டவிரோதமான முறையில் நியமனங்கள், பதவி உயர்வுகள், இடமாற்ற உத்தரவுகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு சலுகைகள் பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றது.


இவ்வாறான செயற்பாடுகள் நியாயமான தேர்தல்களுக்கு இடையூறாக அமையக் கூடும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தொழில் வாய்ப்பு வழங்குதல் நியமனம் வழங்குதல் இடமாற்றம் செய்தல், பதவி உயர்வு வழங்குதல் போன்றவற்றை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளன.ஷ

இது தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கும் கண்காணிப்புக் குழுக்கள் தெரியப்படுத்தியுள்ளன.

பெபரல், கபே போன்ற கண்காணிப்பு குழுக்கள் இது பற்றி அறிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக