இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் நிறைவேற்றியுள்ள தீர்மானம் பற்றிய விடயத்தை இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் 17,18 ஆம் திகதிகளில் விவாதிக்கும்.
நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அங்கு இதுபற்றி ஆராய்ந்த பின்னர் 17, 18 ஆம் திகதிகளில் அதன் மீதான விவாதத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டதாக பிரதி சபாநாயகர் சண்டிம வீரக்கொடி தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்திருந்த பிரேரணையை அடுத்தே அது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கின்றது. "ஐ.நா. விசாரணைக் குழுவை இலங்கை அடியோடு
நிராகரித்திருக்கிறது" - என அந்தப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 ஆம் திகதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 6.30 மணி வரை இவ்விவாதம் நடைபெற்று ஒத்திவைக்கப்படும். மீண்டும் அடுத்த நாள் 2 மணிக்கு விவாதம் ஆரம்பமாகும். அன்று மாலை 6 மணிக்கு விவாதம் பூர்த்தியாவதுடன் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக