கஞ்சா வைத்திருந்தார்கள் என்ற குற்றசாட்டின் பேரில் இருவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் ஓலைத்தொடுவாய் சந்தியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த இடத்துக்குச் சென்ற பொலிஸார் இருவரைக் கைதுசெய்ததுடன், 270கிராம் கஞ்சாவையும் கைப்பற்றினர். சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக