ஞாயிறு, 27 டிசம்பர், 2009
தமிழகத்திலிருந்து படகில் வந்தவர்கள் மன்னாரில் கைது
தமிழகத்திலிருந்து படகொன்றில் இலங்கைக்கு வந்த இலங்கையர்கள் ஆறுபேரை மன்னார் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இவர்கள் ஆறுபேரும் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதாக மன்னார் பொலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு படகில் வந்த ஆறுபேரில் இருபெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இவர்களை ஏற்றிவந்த படகு உரிமையாளர் இடைநடுவில் இறக்கிவிட்டு தப்பிச்சென்றதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மன்னார் பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலீசார் தெரிவித்துள்ளனர். இதேவேளை அம்பாந்தோட்டை கடற்பரப்பில் படகுமூலம் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் விபத்துக்குள்ளான மீனவர்கள் சிலரை கடற்படையினர் காப்பாற்றிக் கரைசேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக