செவ்வாய், 20 மே, 2014

சி.ஐ.சி.ஏ மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி மஹிந்த சீனா பயணம்....!!!!

சீனாவில் நடைபெறும் சர்வதேச மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றிரவு சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
ஆசியாவின் செயற்பாடுகளில் நம்பிக்கையையும் தொடர்பாடலையும் கட்டியெழுப்புவதற்கான அமைப்பு (சி.ஐ.சி. ஏ) ஏற்பாடு செய்துள்ள அதன் நான்காவது மாநாடு இன்று 20ம் திகதி காலை ஆரம்பமாவதுடன் 22ம் திகதி வரை தொடர்ந்து மூன்று தினங்களுக்கு மாநாட்டின் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றும் இந்த மாநாட்டில் கலந்துகொள் வதற்காக வருகை தரும் உலக நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விசேட கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளார்.

ஆசிய நாடுகளுக்கிடையில் நம்பிக்கை மற்றும் தொடர்பாடலை மென்மேலும் கட்டியெழுப்புவதன் மூலம் சமாதானம், சமத்துவம் மற்றும் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்தவை நோக்காகக் கொண்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் கலாநிதி மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.

குறிப்பாக இம்முறை மாநாட்டில் ஒன்பது சர்வதேச நாடுகளுக்கு பார்வையாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதுடன் இதில் இலங்கையும் அமெரிக்காவும் இம்முறை முதல் தடவையாக அந்த அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

ஆசிய நாடுகளுக்கிடையில் நம்பிக் கையையும் தொடர்பாடலையும் கட்டியெழுப்பும் சி. ஐ.சி. ஏ.அமைப்பில் 24 சர்வதேச நாடுகள் அங்கம் வகிப்பதுடன் ஒன்பது நாடுகள் பார்வையாளர் அந்தஸ்து பெற்றுள்ளன.

இம்முறை சீனாவில் நடைபெறும் மாநாட்டில் ஈரான் மற்றும் ரஷ்யாவின் ஜனாதிபதிகளுடன் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பாங் கீ மூனும் சிறப்பதியாகக் கலந்துகொள்ளவுள்ளார். மூன்று தினங்கள் சீனாவின் செங்காய் நகரில் நடைபெறும் இம்மாநாட்டிற்கு சீன ஜனாதிபதி ஹிஜின் பிங் தலைமைதாங்கவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக